உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்

🕔 November 5, 2017

ள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நண்பகல் வரை, உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் செயகலத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளுராட்சிமன்றங்களுக்கான வட்டாரங்கள் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில், கடந்த புதன்கிழமை உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கையெழுத்திட்டமையினை அடுத்து, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்