சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு

🕔 November 2, 2017

ர்த்தக சமூகத்துக்கு உதவும் பொருட்டு, அபிவிருத்தி நிதிக்கான சிறப்பு வங்கியொன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு (வெள்ளி விழா)  நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவி சானாஸ் ஹக்கீம் (மு.காங்கிரஸ் தலைவரின் மனைவி) தலைமையில் மேற்படி நிகழ்வு – நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு, கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “மேற்படி வங்கியின் ஊடாக மேலும் நெகிழ்வுத்தன்மையான வகையில் வர்த்தக சமூகத்தினருக்கு கடன்களை வழங்க முடியும்” எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்