ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

🕔 November 1, 2017

.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த நிலையில், அந்த இடத்துக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டார்.

அரசாங்கத்தை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையினாலேயே, அவருடைய ஐ.தே.கட்சி அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே, பிரதியமைச்சருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்