சந்திரிக்கா MP ஆகிறார்

🕔 October 29, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின் ஆலோசனை மற்றும் ஆதரவு ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரை நாடாளுமன்றுக்குள் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு சந்திரிக்காவை நியமிக்கவுள்ளதாகவும் குறித்த செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க செயலகத்தின் தலைவியாக செயற்படும் சந்திரிக்காவுக்கு, அண்மையில் சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்