ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம்

🕔 October 27, 2017

ட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆள் அடையாள அட்டை, இன்று வெள்ளிக்கிழமை முதல் ‘ஸ்மாட்’ அடையாள அட்டைகளாக வழங்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தெரிவித்துள்ளார்.

முன்பக்கமாக முகம் பார்க்கும் படியாகவுள்ள புகைப்படங்களுன் அமைந்த இலக்ரோனிக் அடையாள அட்டையாக, இன்று முதல் – ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்த அடையாள அட்டைகள் ‘பொலிகாபனேற்’ பிளாஸ்டிக் அட்டையக் கொண்டதாகவும், நவீனதொழில்நுட்பத்தில் அமைந்ததாகவும் இருக்கும்.

ஐ.சி.ஏ.ஓ. எனப்படும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வழங்கியுள்ள விசேட மென்பொருளைக் கொண்டு ,சர்வதேச தரத்தில் இந்த அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன” எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆட்பதிவு திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் 1700 ஸ்ரூடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த ஸ்ரூடியோக்களுக்கு ஐ.சி.ஏ.ஓ. வழங்கிய மேற்படி மென்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த ஆணையாளர், அடையாள அட்டை பெறுகின்றவரைப் படம் பிடித்தவுடன், அந்தப் படத்தினை ஒன்லைன் மூலமாக – குறிப்பிட்ட ஸ்ரூடியோக்கள் அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்