வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு

🕔 October 22, 2017
– பாறுக் ஷிஹான் –

டமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு வக்பு  சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்ற சனிக்கிழமை நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச். நூருல்அமீன் இந்த கருத்தரங்கில்  வளவாளராக கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்