யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 August 7, 2015
Osmaniya - Jaffna - 03
பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தற்காலிக அதிபர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில், இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதும், இதுவிடயத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனால்,  ஏமாற்றமடைந்த பாடசாலை மாணவர்கள் – தமது பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, சுலோகங்களை ஏந்தியவாறு – இன்று வெள்ளிக்கிழமை, பாடசாலைக்கு முன்பாக, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

ஆயினும், கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்களை, பாடசாலைக்குள் வருமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தியமை காரணமாக, குறித்த கவன ஈர்ப்பு நடவடிக்கையானது, இடைநடுவில் கைவிடப்பட்டது.

இதன்போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட மாணவர்களை, பாடசாலைக்குள் செல்லுமாறு நிர்ப்பந்தித்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்குமிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் இடைநடுவில் அழைக்கப்பட்டமையினால், குறித்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை பெற்றோர்கள் தொடர்ந்த நடத்தினர். இதன்போது, மாணவர்கள் வைத்திருந்த சுலோகங்களை பெற்றோர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன் பின்னர், குறித்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை நிறைவு செய்து கொண்டு, பெற்றோர்கள் கலைந்து சென்றனர். ஆயினும், தமது பாடசாலைக்கு விரையில் நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்படாவிட்டால், மீண்டும் இவ்வாறான கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.Osmaniya - Jaffna - 01Osmaniya - Jaffna - 02Osmaniya - Jaffna - 05Osmaniya - Jaffna - 04

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்