றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு

🕔 October 17, 2017

– சப்னி அஹமட் –

ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நூலினை கனடா அமைப்பின் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.  நஸீர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.  ஹனீபா உள்ளிட்ட பலர் அதிதிககளாக் கலந்து கொண்டனர்.

இதன்போது, நூலாசிரியர் றிஸ்லியின் தயார் மற்றும் படைப்பாளிகள் உலகம் அமைப்பின் தலைவர் படைப்பாளிகள் உலகம் அமைப்பின் நிருவுனர் ஐங்கரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றிஸ்லி, தேசியப் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளில் கவிதைகள் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்