மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு

🕔 October 16, 2017

ட்ட விரோதமாக மின் இணைப்பினை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெற்று வந்துள்ளதாக, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க மீது இலங்கை மின்சார சபை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கினை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென நீதிமன்றம் அறிவித்தது.

தாய்வான் நாட்டிலுள்ள வங்கியொன்றின் கணக்கிலிருந்து பெருந்தொகைப் பணத்தினை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான ஷலில முனசிங்க, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஷலில இலங்கை பிரஜையல்ல என்றும், அவர் பிருத்தானிய குடியுரிமையைப் பெற்றவர் என்றும், குற்றப் புலனாய்பு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்