அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ

🕔 October 10, 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னம் சின்னத்தினுடைய கட்சியின் தலைவர்தான், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட , லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்குபரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க நேற்று கைதானார்.

ரவி கருணாநாயக்கவேதான், லிற்றோ கேஸ் நிறுவனத்துக்கு ஷலில முணசிங்கவை  தலைவராக நியமித்ததாகவும் நாமல் கூறியுள்ளார்.

“எங்களை திருடர்கள் என கூறிய நல்லாட்சியாளர்களின் திருட்டுகள் தினம் தினம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றும், நாமல் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார்.

“இவர்கள் அனைவரும் கூட்டுத் திருடர்கள்” எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்