நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்

🕔 October 10, 2017

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.பி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரையும், மாகாணசபை உறுப்பினர்களான யு. கொடிகார, சம்பத் அத்துகொரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரையும், இன்று செவ்வாய்கிழமை ஹம்பாந்தோட்ட பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து இவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே, மேற்படி ஆறு பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்