நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 October 10, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி, ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பில் 07 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்படி ஆர்ப்பாட்டத்தை நாமல் உள்ளிட்டவர்கள் நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தை நடத்த வேண்டாம் என்று, நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவத்தில் 04 பொலிஸார் காயமடைந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்