மஹிந்த வீட்டில் நுழைந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவர்; நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

🕔 October 6, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பு வீட்டினுள் பலாத்காரமாக கத்தியுடன் நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்ட நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, ,இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பில் உள்ள வீட்டிற்குள் கடந்த 21ம் திகதி நுழைய முற்பட்ட இளைஞரை, கறுவாத் தோட்ட பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் கொழும்பு மேலதிக நீதிவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது, குறித்த இளைஞர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மனநலம் பாதிப்பு காரணமாக முன்னரும் சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் நீதிமன்றத்துக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாக நீதிமன்றில் தெரிவித்த பொலிஸார், அவரை மனநல வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் கோரிக்கையை எற்றுக் கொண்ட நீதிபதி, அதற்கான அனுமதியை வழங்கியதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்