இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

🕔 October 4, 2017

லங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது.

மேலும், நீதிமன்றில் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 1200 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக அழிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும் வரையில், இவ்வாறான போதைப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பது வழமையான நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த வருடம் 1486 கிலோகிராம் கொகொய்ன் இலங்கையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைவஸ்து தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இதனுடன் தொடர்புபட்ட 06 இலங்கையர்களும், 1 3 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது.

இதில் பெரிய தொகையாக கடந்த வருடம் ஜுலை மாதம் 301 கிலோகிராமும்,  கடந்த டிசம்பர் மாதம் 928 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்