கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம்

🕔 October 3, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர், சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதி அமைச்சர் பைசல் காஸிம், கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வருக்கு இன்று  செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதிலிருந்து, கடைசியாக கலைக்கப்பட்ட இரண்டு மாகாண சபையிலும், அன்வர் உறுப்பினராக இருந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்