ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

🕔 September 30, 2017

லங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக மியன்மார் பௌத்தர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பதும், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். சரியான புரிதல்களும், அறிவும் இல்லாமல் இந்த இரண்டினையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

எனவே, ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், பௌத்த கண்ணோட்டத்துடனும் அனுகுமாறு, அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்