ரோஹிங்ய அகதிகளை நாட்டில் வைத்திருப்பது நல்லதல்ல: பிரபா கணேசன் கூறுகிறார்

🕔 September 30, 2017

ரோஹிங்ய அகதிகளை நாட்டில் தங்க வைத்துப் பராமரிப்பதனால், இனங்களுக்கிடையில் மென்மேலும் முறுகல் ஏற்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எமது நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இனமுறுகல், ரோஹிங்ய அகதிகளால் மேலும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே அதிகம் உள்ளது.

மனிதாபிமான முறையில் இந்த அகதிகளை பராமரிப்பது நல்ல விடயம்தான். ஆனால், நமது நாட்டிலுள்ள நிலப்பரப்போடு ஒப்பிடுகையில் சனத்தொகை அதிகமாக உள்ளது.

நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கான உரிமைகளை, அவர்களின் அரசியல் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாமலுள்ளது.

எனவே, ரோஹிங்ய அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்கள், அரசியல் லாபங்களை மறந்து, நாட்டின் இறைமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஊடக அறிக்கையினூடாக தம்மை – மனித உரிமைக் காவலர்களாகக் காட்டிக் கொள்வதை விடுத்து, நியாயமாகச் சிந்திக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்