காசு, பணம், துட்டு, Money :மஹிந்த உலகளவில் 49ஆவது பணக்காரராம்

🕔 September 29, 2017
– எம்.ஐ. முபாறக் –

ஹிந்தவும் ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும்  கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும்  அரசாங்கம்  குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் 36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 86 கோப்புகள் மீதான  விசாரணைகளில் 40 கோப்புகள் மீதான விசாரணைகள் முடிவுற்று அதன் பெறுபேறுகள் இலங்கை அரசாங்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளன என்று அரசாங்கத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் துபாய் வங்கியில் மஹிந்தவினதும் அவரது மகன் நாமலினதும் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

மஹிந்தவின் கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாவாம்.கேட்கும்போது தலையே சுற்றுகிறது. இது உண்மை என்றால் மஹிந்த சர்வதேச அளவில் 49ஆவது பணக்காரராம்.

அப்போ இன்னும் சிறிது காலம் ஆட்சியில் இருந்திருந்தால் பில்கேட்ஸை முந்தி இருப்பார்போல.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்