சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

🕔 September 26, 2017

ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் சிபாரிசுக்கிணங்க, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்தப் பதவிக்கு சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் சூலானந்த பிரேரா, பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

பி.எஸ்.எம். சார்ல்ஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் இரண்டு முதுமானிப் பட்டப்டிப்பினையும் இவர் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்