மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

🕔 September 20, 2017

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன.

முன்னதாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்