ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

🕔 September 18, 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய முஸ்லிம் மக்கள் மீது, மியன்மார் ராணுவத்தினர் மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, லட்சக் கணக்கானோர் அகதிகளாக நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றனர்.

மியன்மார் ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல்களை நிரூபிக்கும் வகையிலான நம்பகத்தன்மையுடைய பல ஆதாரங்கள் கிடைத்தமையினை அடுத்து, ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும் படி, அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகியிடம் ஐ.நா.சபை தொடர்ச்சியாகக் கோரி வந்தது.

ஆனாலும், இந்தக் கோரிக்கை தொடர்பில் எந்தவித பதில் நடவடிக்கையினையும் ஆங் சாங் சூகி மேற்கொள்ளவில்லை.

இதனையடுத்து, ஆங் சாங் சூகிக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்குவதாகத் தெரிவித்து, ஐ.நா.சபையின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்