சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது

🕔 September 16, 2017

னிக்கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே இன்று சனிக்கிழமை அழித்துக் கொண்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றம் இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியவை கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி புளோரிடாவிலிருந்து சனி கிரகத்துக்கு கேஸினி விண்கலத்தை செலுத்தியது.

இதன் பின்னர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு பல்வேறு புகைப்படங்கள், சனி கோள் பற்றி தகவல்களை கேஸினி அனுப்பி வந்தது.

இதனையடுத்து தனது 13 ஆண்டு கால பணியை நிறைவு செய்து கொண்ட கேஸினி, தனது ஆயுளை முடித்துக்கொண்டதாக இன்று நாசா டுவிட்டரில் தெரிவித்தது.

இது தொடர்பாக நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்;

‘கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கேஸினி விண்கலம், இதுவரை 4.9 பில்லியன் மைல்கள் பயணித்து,0 4 லட்சத்து 53 ஆயிரம் புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், மணிக்கு 01 லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சனி கிரக வளி மண்டலத்தில் மோதி வெடித்த கேஸினி விண்கலம், தனது ஆயுளை முடித்துக்கொண்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்