மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

🕔 September 15, 2017
– பிறவ்ஸ் –

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாலத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டின் 04 கோடி ரூபா நிதியுதவியில் இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இப்பாலம் மூலம் 05 விவசாய கண்டங்களிலுள்ள 02 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண்மை  செய்கையில் ஈடுபடும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.ஏ. சலீம், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம். இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ. முஸ்தபா, கட்சியின் உயர்பீட உறுப்பினர் அஸீஸ்,  கமக்கார அமைப்புகளின் பிரநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்