தென் மாகாண அமைச்சர் வீரசிங்க, பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்

🕔 September 13, 2017

தென் மாகாண விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வீரசுமண வீரசிங்க, அவரின் அமைச்சிப் பதவியிலிருந்து இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, தென் மாகாண சபையில் இவர் வாக்களித்தமை காரணமாகவே, அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

வீரசிங்கவிடமிருந்த எடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியினை, தென் மாகாண முதலமைசசர் ஷான் விஜயலால் டி. சில்வா இன்று காலை பொறுப்பேற்று, சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் அண்மையில் தென் மாகாண சபையில் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கு எதிராக பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்