அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

🕔 September 10, 2017

– முன்ஸிப் அஹமட் – 

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டதோடு கருத்துக்களையும் பரிமாறினர்.

குறிப்பாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து, தமது தரப்பிலுள்ள முக்கியமாக அபிப்பிராயங்களை ஆளுநரிடம்  தே.காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா முன்வைத்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையும் கலந்து கொண்டார்.

கிழக்கு வாசல் இல்லத்துக்கு தனது குடும்பத்தினருடன் ஆளுநர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்