ஜனாதிபதியின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும்: மஹிந்த தெரிவிப்பு

🕔 September 9, 2017

பௌத்த மத அனுஷ்டானங்களின்போது பயன்படுத்தப்படும் ‘சில்’ துணைியினை வழங்கியமைக்காக, தற்போதைய முதற்பெண்மணியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இணைந்து அவரின் மனைவி, சில் துணிகளை விநியோகித்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மூன்றாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை சென்று பார்க்கவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

2015ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரத்தின் பொருட்டு, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குரிய 600 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, பௌத்த மத அனுஷ்டானங்களின் போது பயன்படுத்தப்படும் ‘சில்’ துணியை கொள்வனவு செய்த வழக்கில், லலித் வீரதுங்க குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்