உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில்

🕔 September 4, 2017

.பொ.த. உயர்தரப பரீட்சையின் போது ரசாயனவியல் பாடத்துக்கான வினாத்தாளினை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஐந்து பேரில் மூவருக்கு, இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

மாணவன், அவரின் தந்தை மற்றும் வினாத்தாளை அம்பலப்படுத்தினார் எனச் சந்தேகிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரின் தந்தை ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.ஏ. ருவன் பத்திரண மேற்படி நபர்களை பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

மேற்படி நபர்கள் மூவரும் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசுப் பிணையிலும், தலா 01 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும்  விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, தனியார் வகுப்பு ஆசிரியர் மற்றும் அவரின் சகோதரரரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிரப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்