சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

🕔 September 2, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 66ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட்டு வருகின்றமையினாலேயே இந்த முடிவினை தாம் எடுத்ததாகவும் அவர் கூறினார்.

“கடந்த 65ஆவது மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்தானே” என்று இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்டபோது; “ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு, தற்காலிமானது என்று நினைத்துத்தான் கடந்த வருடம் கலந்து கொண்டோம். ஆனால், அது தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதால், நாம் இந்த முடிவினை எடுத்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்