பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

🕔 September 2, 2017

– மப்றூக், படம்: எம்.எஸ்.எம். நூர்தீன் –

க்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அவர்களே நிகரானவர்கள். நகமும் சதையுமாக இருப்பவர்கள் எதிரிகளாவதும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து நண்பர்களாகிக் கொள்வதும் அரசியலில் அடிக்கடி நிகழும் ஆச்சரியங்களாகும்.

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – காத்தான்குடி அரசியலில் கோலோச்சுபவர். ஹிஸ்புல்லாஹ் மூலமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக். இருவரும் காத்தான்குடியைச் சொந்த இடமாகக் கொண்டவர்களாவர்.

ஷிப்லி பாறுக் – கிழக்கு மாகாண சபை உறுப்பினராகி இரண்டு வருடம் கடந்த நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு துரோகம் செய்து விட்டு, முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டார். இந்த துரோகம் அமைச்சர்  ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, காத்தான்குடி அரசியலில் ஷிப்லி பாறுக் பெரும் இடர்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஹிஸ்புல்லாஹ்வும் ஷிப்லி பாறுக்கும் அடிக்கடி முரண்பட்டு மோதிக் கொள்கின்றமையினை ஊடகங்களிலும் காணக் கிடைக்கிறது.

கிட்டத்தட்ட கீரியும் – பாம்புமாகவே அரசியலில் ஹிஸ்புல்லாஹ்வும் ஷிப்லி பாறுக்கும் பார்க்கப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், இன்று சனிக்கிழமை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. தொழுது முடிந்த பின்னர் மக்கள் – ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு தமது அன்பினைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கும் கைகொடுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுதி, சலாம் சொல்லிக் கொண்டார்கள்.

இந்தக் காட்சியை கண்ட மக்களுக்கு பெரும் சந்தோசம். எல்லா வேற்றுமைகளுக்கு அப்பாலும் இவ்வாறான சகோதரத்துவத்தையே இஸ்லாமும் வலியுறுத்துகிறது.

இது தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் விரும்பமுமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்