கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளனவாம்; இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக ஹக்கீம் கருத்து

🕔 August 25, 2017

டவுள் நேரில் வந்தாலும் அரசாங்க கட்சிகளிடையே காணப்படும் முரண்பாடுகளை  தீர்க்க முடியாது என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடுவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருக்கு இடையில்  கருத்து மோதல்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரதான கட்சிகளிடையே காணப்படும் கருத்து முரண்பாடுகளை இன்றும் நாம் மேடையில் கண்டோம். இது தவிர்க்க முடியாதது. இதுதான் யதார்த்தம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்