முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி

🕔 August 22, 2017

ஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினைக் கொள்வனவு செயதமை தொடர்பில் வழக்கு ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளார்.

இலக்கம் 260/12, ரொறிங்டன் அவன்யு, கொழும்பு – 07 எனும் விலாசத்திலுள்ள வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ள சிராந்தி, அதற்கான பணம், தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை, சரியான முறையில் வெளிக்காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பணச் சலவை செய்த குற்றத்தின் கீழ், சிராந்திக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு, சட்ட மா அதிபர் நிணைக்களம் அறிவுத்தியுள்ளதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் ஊடகமொன்று கூறியுள்ளார்.

குறித்த வீடு கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்துடன், லொக்குவிதான எனும் நபரும் தொடர்புபட்டுள்ளார் என்றும், மேற்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டை கொள்வனவு செய்வதற்கு பணம் எவ்வாறு கிடைத்தது என, சிராந்தி ராஜபக்ஷவிடம் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தபோது, தனது மருமகனான வர்த்தகர்  டில்சான் விக்ரமசிங்க என்பவரிடம் கடனாகப் பெற்றதாக கூறியிருந்தார்.

2000ஆம் ஆண்டு இந்த வீட்டில் மஹிந்த ராஜபக்ஷ குடியிருந்தார். பின்னர் சிராந்தியின் சிரிலிய சவிய எனும் அரச சார்பற்ற நிறுவனம், நாமல் ராஜபக்ஷவின் நீலப் படையணி உள்ளிட்ட சில அமைப்புக்களின் விலாசமாகவும் இந்த வீடு இருந்தது.

தற்போது இந்த வீடு, பண்டகசாலையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்