கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது

🕔 August 17, 2017

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்கள் இன்று வியாழக்கிழமை முதல், கால வரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி த. ஜயசிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்கு தீர்வு காணப்படாமை காரணமாகவே, இவ்வாறு பல்கலைக்கழகம் மூடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சகல மாணவர்களும், தங்கள் பொருட்களுடன் நாளை வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்பதாக பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும், தமது அறைகளின் சாவிகளை பொறுப்பாகவுள்ள ‘வாடன்’களிடம் ஒப்படைக்குமாறும், பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி பாரியளவான மாணவர் குழுவொன்று பல்கலைக்கழக உபவேந்தரின் இருப்பிடத்தை சுற்றி வளைத்ததோடு, அவரை வெளியேறாதவாறு வைத்திருந்ததால், பதட்ட நிலையொன்று உருவாகியிருந்தது.

எவ்வாறாயினும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தொடர்ந்தும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்