ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்

🕔 August 12, 2017

மைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தும் விதமாக, அமைச்சர் ராஜித தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றமையினை அடுத்தே, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினரின் சந்திப்பின்போது, அண்மையில் பேசப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் மத்திய கிழக்கு நாடொன்றிலுள்ள வங்கிக் கணக்கில் 18 பில்லியன் டொலர்களை வைப்பில் இட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ச்சியாக ஊடகங்கள் முன்னிலையில் பேசி வருகின்றார்.

இதனை அடிப்படையாக வைத்தே, அவர் மீது வழக்குத் தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்