இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது

🕔 August 9, 2017

திக எடையுடைய குழந்தையொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்துள்ளது. இந்தக் குழுந்தை பிறக்கும் போது அதன் எடை 13.1 பவுன்ட் (5.94 கிலோ கிராம்) ஆகும். இலங்கையில் இதுவரை பிறந்த குழந்தைகளில் அதிக எடையுடைய குழுந்தை இதுதான் என பதிவாகியுள்ளது.

அதேவேளை, உலகில் பிறந்த அதிக எடையுடைய 11 குழுந்தைகளில் இந்தக் குழுந்தையும் ஒன்றாகும் எனவும், கின்னஸ் புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

உலகில் பிறந்த மிகவும் அதிக எடையுடைய குழந்தைகளாக இரண்டு குழந்தைகள் கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளன. இந்தக் குழந்தைகளின் எடை 22 பவுன்ட் (9.97 கிலோகிராம்) ஆகும். இந்தக் குழந்தைகளில் ஒன்று அமெரிக்காவிலும், மற்றையது இத்தாலியிலும் பிறந்துள்ளன.

பலப்பிட்டிவில் பிறந்த மேற்படி குழுந்தை – ஆண் குழந்தையாகும். 28 வயதுடைய நதீஸா நில்மினி என்பவர் இந்தக் குழந்தையை, அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்துள்ளார். இவர் ஹம்புறுகல – ஹொறவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இது அவருக்கு முதல் குழுந்தையாகும்.

பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேற்படி குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்