தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவராக நஸார் ஹாஜி தெரிவு

🕔 August 6, 2017

– முன்ஸிப் அஹமட் –

தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான மத்திய குழுத் தலைவராக, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நஸார் ஹாஜி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தூய முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், திட்டமிடல் உத்தியோகத்தருமான ஐ.எல். பஜ்ருத்தீன் தலைமையில், மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இதன்போதே, தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் தலைவராக நஸார் ஹாஜி தெரிவானார்.

தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுவின், முக்கிய பதவிகளுக்கு தெரிவானோர் விபரம் வருமாறு;

செயலாளர்: இர்பான் முகைதீன்
பொருளாளர்:  ஐ.எல்.எம். மிஜ்வாட்
கொள்கை பரப்புச் செயலாளர்:  முஸ்னத் சரீப்தீன்
உப தலைவர்: என். ஜமால்தீன்
உப செயலாளர்: முஸ்தாக் முகம்மட்

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசனலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைக் கொண்ட அணியினர் இணைந்து, ‘தூய முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் அரசியல் கட்சியொன்றினை ஸ்தாபித்து, அதனை விஸ்தரிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சினர்தான், முஸ்லிம் கூட்டமைப்புக்கான அழைப்பினை விடுத்து, அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்