அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

🕔 August 6, 2017

ர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார்.

அதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், உங்கள் நிலைப்பாடு என்ன என்று, அமைச்சர் தயா கமகேயிடம் கேட்டபோது, அது தொடர்பில் கட்சித் தலைவர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்