ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர்

🕔 August 5, 2017

– க. கிஷாந்தன் –

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய  வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

நாடாளுமன்றத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் அதிகமானோர் வாக்களிப்புக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று எம்மிடம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயம் வெற்றிபெறும். அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றார்.

ஓன்றிணைந்த  எதிரணியின் புதிய கட்சியான, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்த்து கொள்ளும் கூட்டம் கினிகத்தேனை பீடாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments