பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

🕔 August 5, 2017

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான  ரவி கருணாநாயக்கவை, அவருடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அலரி மாளிகையில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி இவ்வாறு வேண்டிக்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை ராஜினாமா செய்வதே ஆகும் என, ரவி கருணாநாயக்கவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்