மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

🕔 July 23, 2015

Jameel - 0123
– எம்.வை. அமீர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும், அ.இ.ம.காங்கிரசின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரசானது – ஒருசிலரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற கட்சியாக,  கீழ்மட்டத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில், நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், பொதுத் தேர்தில் அ.இ.ம.காங்கிரசின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான கலாநிதி சிராஸ் மிராசாஹிபும், இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜெமீல் இங்கு தொடர்ந்து உரைாயற்றுகையில்;

மறைந்த தலைவர் அஷ்ரப், சமூகம் சார்ந்த பல்வேறு உத்தரவாதங்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் இருந்த ஆட்சித் தலைவர்களிடம் பெற்று, அதனூடாக பாரியளவில் பங்காற்றினார். ஆனால், தற்போதைய தலைமை, உருப்படியான எதனையும் செய்யவில்லை. பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைமையானது, சமூக நலனில் கொள்வதில்லை.

மறைந்த தலைவர், அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி தனது வேலைத்திட்டங்களையும், உயர் நியமனங்களையும் வழங்கினார். ஆனால், தற்போதைய தலைமை கண்டியை மையப்படுத்தியும் – தனது குடும்பத்தை மையப்படுத்தியுமே, தன்னுடைய நகர்வுகளை மேற்கொள்கின்றது. பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைமை சமூக நலனில் கொள்வதில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட என்னை, தலைமை – சரியான முறையில் பயன்படுத்தவில்லை. ஆனால், அ.இ.ம.கா. தலைமையானது சமூக நலனையே பிரதானமாக கொண்டு செயற்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அமைச்சர் றிசாத் பதியுதீன்  இறுக்கமான ஒப்பந்தம் செய்ததன் காரணமாக, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் ஒதுக்கீட்டு விடயத்தில், அ.இ.ம.காங்கிரஸ் தனது இலக்கை அடைந்துள்ளது.

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை, நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மு.காங்கிரஸ், காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  அ.இ.ம.கா. தலைமையானது, சாய்ந்தமருதுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்கி, இவ்வூரின் தேவைகளை, அந்தஉறுப்பினர் ஊடாகவே நிறைவேற்றவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – புத்திஜீவிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அமைச்சர் றிசாத் தலைமையிலான அ.இ.ம.காங்கிரஸ் அதிகமான புத்திஜீவிகளை தன்னகத்தே இணைத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதரை இணைக்க முயற்சிக்கிறது. முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலை கட்சியுடன் இணைத்து தேர்தலில் களமிறக்கியுள்ளது. மேலும், மாகாணசபை உறுப்பினர், கல்வியலாளர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் என்று, நாளுக்கு நாள், அ.இ.ம.காங்கிரசில் இணைந்து வருகின்றனர் என்றார்.

சிராஸ் உரை

கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம.கா, அம்பாறை மாவட்ட வேட்பாளருமான, சிராஸ் மீராசாஹிப் இங்கு பேசுகையில்;

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான, அ.இ.ம.கங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

என்னுடைய வெற்றிப்பயனத்தில் எல்லோரும் இணைந்து கொள்ளவேண்டும். கல்முனை மாநகரசபையை மையப்படுத்தி, இன மற்றும் பிரதேச வேறுபாடின்றி,  அர்ப்பணிப்புடன் நான் செயற்படவுள்ளேன்.  எனது மக்கள் சேவையை, முஸ்லிம் காங்கிரஸ் மழுங்கடித்து விட்டது. மக்களுக்காக வேலை செயற்படுவதற்கு, மக்கள் அங்கீகாரத்தினை எனக்கு வழங்க வேண்டும்.

முன்பு அரசியல் செய்தது போல், இணக்க அரசியல் செய்ய விரும்பவில்லை. மக்கள் சேவைக்காக என்னை அர்ப்பணிக்க உள்ளேன். கடந்த அரசியல் வரலாற்றில், அவர்கள் விட்ட தவறுகளை மக்களுக்கு சொல்லாமல் விடப்போவதில்லை. மக்கள் – உண்மையை உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.

இதேவேளை, மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு . ஸ்ரீ.மு.காங்கிரஸ் தன்னைக் கோரியதாகவும், இதன்போது, தான் ஏற்கனவே வன்னி பஸ்ஸில் ஏறிவிட்டதாக, அவர்களுக்கு பதிலளித்ததாகவும் சிராஸ் இங்கு குறிப்பிட்டார். Ziras - 032

Comments

புதிது பேஸ்புக் பக்கம்