கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர்

🕔 July 22, 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பு  விடுப்பதற்கு எதிர்பாப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களுக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.

இரத்தினபுரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் செப்டம்பர் மாதமும், ஏனைய இரண்டு சபைகளின் ஆட்சிக் காலம் ஒக்டோபர் 01ஆம் திகதியும் முடிவடைகின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சட்டம் உருவாக்கப்படும் வரை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாது எனவும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்