ராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.டி. அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ தலைமை அதிகாரியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ராணுவ தளபதியாக பொறுபேற்றமையினை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு, அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
சபுகஸ்கந்தை பாதுகாப்புச் சேவை மற்றும் தலைமை கல்லூரியின் கட்டளை அதிகாரியாக அமல் கருணாசேகர சேவையாற்றி வருகிறார்.
ராணுவத்தில் 1991ஆமு் ஆண்டு சேர்ந்து கொண்ட அமல் கருணாசேகர, 1994ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் இணைந்தார்.
வெளிநாடுகள் பலவற்றில் ராணுவத்துறை சம்பந்தமாக உயர்கல்வியை இவர் கற்றுள்ளார்.
ராணுவத்தில் சிறப்பான பணியாற்றிமைக்காக ரணவிக்ரம, ரணசூர, சிறப்பு பணி மற்றும் உத்தமசேவை ஆகிய பதக்கங்களை கருணாசேகர பெற்றுள்ளார்.



