மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார்

🕔 July 21, 2017

– க. கிஷாந்தன் –

பா
டசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த என்.சி. எனும் போதைப் பொருள் அடங்கிய 100 டின்களுடன் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

என்.சி. போதைப் பொருள் அடங்கிய 25 டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்தே மேற்படி 100 டின்களும் மீட்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பொகவந்தலாவ பிரதேசத்தில் போதை பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பெற்றோர்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து, மேற்படி என்.சி. டின்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 25 ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்