அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை

🕔 July 17, 2017

– றிசாத் ஏ காதர் –

கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் முறைகேடான செயற்பாடு காரணமாக, மேற்படி சங்கத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் பொருட்டு அவசரமாக முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி, எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதம்; சங்கத்தின் நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு முகவரியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தில் தலைவராக கடந்தகாலங்களில் தெரிவுசெய்யப்பட்ட இவர், ‘ஆயுட்கால’ தலைவராக – தன்னை தெரிவு செய்வதுக்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அந்நடடிவக்கைக்கு பொதுச்சபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இதனால் இச்சங்கத்தின் ஆயுட்கால தலைவர் பதவியை பிழையான வழிகளினூடாக அடைவதுக்கு இவர் முயற்சித்து முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் சிலரை இடைநிறுத்தியுள்ளார் என்று மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சங்க தலைவரின் எதேச்சிகார நடவடிக்கைக்கு, முகாமைத்துவ சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளதாகவும், வவுனியா மாவட்டக் கிளையின் அங்கத்தவர்களில் 63பேர், மேற்படி தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளதாகவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், அவருக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், உடனடியாக நிருவாக ஆலோகருக்குள்ள அதிகாரத்தின் மூலம், முகாமைத்துவ சபையை கூட்டுமாறு சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் கடிதத்தில் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதத்தின் பிரதிகள் தொழில் ஆணையாளர், வடமாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள்தி மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்