நிதிக் குற்றங்களை விசாரிக்கும் புதிய செயலகம் விரைவில்
நிதிக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான புதிய செயலகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பிலான பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று, பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.
புதிய செயலகமானது, சர்வதேச தரத்துக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் ஒழிப்புக் குழு செயலகம், இம்மாதம் செயலிழந்தமையினையடுத்து, புதிய செயலகம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.