நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

🕔 July 9, 2017

நாடு 1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியை மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

அரசாங்க குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவக் கல்லூரியை கலைத்து விட வேண்டும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

சைட்டம் தனியார் கல்லூரியை அரசாங்கம் கலைக்காமல் விட்டால், 1988 – 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல், நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் சம்பிக்க குறிப்பிட்டார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களில் தனியாக கட்டணம் செலுத்தி, கல்வி கற்கும் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றினையும் அமைச்சர் சமர்ப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்