பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

🕔 July 4, 2017

லங்கையில் மேலும் 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தம்மைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 95 கட்சிகளில், மேற்படி 06 கட்சிகள் பதிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதனால், தற்போது 64 ஆக உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

பதிவுக்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது  நேர்முகப் பரீட்சைக்காக 16 கட்சிகள் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தன.

Comments