இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

🕔 July 2, 2017

– எம்.வை. அமீர் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அந்தக் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம். ஜெமீலின் திட்டத்திற்கமைவாக, இந்த மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் வி.எம். ஹுசைர் தலைமையில், மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் சனிக்கிழமை  ஒலுவில் பிரதேசத்தில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments