40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

🕔 July 2, 2017

.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன.

இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம், முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதனையடுத்து தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்கள் அவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவருகின்றார்.

தொடர்ந்து 40 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்