வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

🕔 June 29, 2017

டக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார அமைச்சராக கே. சர்வேஸ்வரன் பதவியேற்றுக் கொண்டார்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விவசாய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்கள் இருவர் பதவி விலகியுள்ள நிலையில், அவர்கள் வசமிருந்த அமைச்சுக்களை நிர்வகிப்பதற்காக, மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனந்தி சசிதரன் – புலிகளின் முன்னாள் தளபதி எழிலன் எனப்படும் சசிதரனின் மனைவி என்பதும், சர்வேஸ்வரன் – ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்