சரணடைந்தார் ஞானசார

🕔 June 21, 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீப காலமாக தலைமறைவாகியிருந்தார்.

எவ்வாறாயினும், ஞானசாரரின் பாதுகாப்பினை பொலிஸார் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால், நாளை வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவொன்றின் பொருட்டு, அவர் ஆஜராகுவார் என, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

Comments